Sunday, 15 May 2016

சித்தர்கள் தினம்:

 “உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள்.சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக சித்தர் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடபடுகிறது.சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வண்ணமும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக சித்தர் தின விழா  கொண்டாடப்படுகிறது.

 சித்தர்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகள்..

 சித்தர்மரபை நோக்குங்கால், இதுவரைகண்டுள்ள எண்ணிக்கைகட்டுக்கடங்காதது. பதினெட்டு சித்தர் என்ற மரபு பன்னெடுங்காலமாய் இருந்து கொண்டேவந்துள்ளது. நூலுக்குநூல் எண்ணிக்கை வேறுபட்டபோதிலும் கீழ்க்கண்ட சித்தர்கள் மிகமுக்கியமானவர்களாக கருதப்பட்டு அவர்களின் பாடல்கள் ஞானக்கோவையாகவும் சித்தர்பாடல்களாகவும் பல்வேறு காலங்களில் தொகுக்கப்பட்டுள்ளன.சித்தர்களின் எண்ணிக்கையை பதினெட்டு என்றுபல சித்தர்பாடல்களே கூறுகின்றன.
“சித்தர்கள் தான் பதினென்ப ராத்தாள் சொன்ன/செயலெல்லாம் கண்டுணர்ந்து தெளிந்திட்டார்கள்”
என ஞானவெட்டியான் 1500ல் பாடல் 220ம்,
“பாடுவார் பதிணென்பேர் நூல்கள் எல்லாம்/பாலகனே இத்தயிலம் கொண்டு சாதி”
என்று அகத்தியர் பரிபாஷை 500ல் பாடல் 100ம்,
“வாத நூல் ஆதீதம் பதிணென்பேர் சித்தர் வசனித்த நூல்களும் பலிதம்”
என புலத்தியர் கற்பம் 300ல் பாடல்54ம்
“மூலரோடு பதிணென்பேர் பரநாதாக்கள்’’
என மச்சமுனி பெருநூல் பாடல் 2ம்
“துலக்கு மந்தப் பதினெட்டுச் சித்தரையா/ தொல் புவியில் சொல்லாமல் மறைத்தார்”
என யாகோபு வைத்திய வாத சூத்திரம் 400ல் பாடல் 179ம்
சித்தர்களின் எண்ணிக்கையை வரையறுத்து சொல்லுவதாக பாடல் பல உள்ளன. ஒவ்வொரு சித்தர்களின் காலமும் வெவ்வேறானபோது எவ்வாறு அவர்களே அவர்களின் எண்ணிக்கையை பற்றி எப்படி இயலும் என ஐயமும் எழத்தான் செய்கிறது. இருந்தபோதும் முக்கியமாகக் கருதப்படும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டையும் தாண்டி அதிகமாக உள்ளது என்பதே உண்மை.

அபிதான சிந்தாமணியில் சித்தர்கள் பற்றிய குறிப்பில் சித்தர் ஒன்பதின்மர் என்று
1.சத்தியநாதர்
2.சதோகநாதர்
3.ஆதிநாதர்
4.அனாதிநாதர்
5.வெகுளிநாதர்
6.மாதங்க நாதர்
7.மச்சேந்திரநாதர்
8.கடேந்திரநாதர்
9.கோரக்க நாதர் ஆகிய ஒன்பதுபேரையும்,தொடர்ந்து சித்தர் பதிணென்மர் என்று
அகத்தியர்,
போகர்,
கோரக்கர்,
கைலாச நாதர்,
சட்டைமுனி,
திருமூலர்,
நந்தி,
கூன் கண்ணர்,
கொங்கணர்,
மச்சமுனி,
வாசமுனி,
கூர்மமுனி,
கமல முனி,
இடைக்காடர்,
புண்ணக்கீசர்,
சுந்தரானந்தர்,
உரோமரிஷி,
பிரமமுனி இவர்களின்றி
தன்வந்திரி,
புலஸ்தியர்,
புசுண்டர்,
கருவூரார்,
ராமதேவர்,
தேரையர்,
கபிலர் முதலியவரும் பட்டியலிடப்படுகின்றனர்.சித்தரின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களைப் பற்றிய உண்மைகளைப் போலவே அவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஒவ்வொரு நூலிலும் முரண்களைக் காண முடிகிறது. எனினும் சித்தர் ஒன்பதின்மர் எழுதியதாக எந்த ஒரு பாடலும் நமக்குக் கிடைக்கவில்லை. பதிணென் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலில் 44 சித்தர் வகை பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
அவற்றில் சிவவாக்கியரின் பாடல் முதன்மைப்படுத்தப்பட்டு
பட்டினத்தார்,
பத்திரகிரியார்,
திருவள்ளுவர்,
சட்டைமுனி,
பாம் பாட்டி,
இடைக்காடர்,
அகப்பேய்ச்சித்தர்,
குதம்பைச் சித்தர்,
கடுவெளிச்சித்தர் என மூன்று பாகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன..

சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம். அதுபோன்றே மதப்பிரச்சாரங்கள் பின்னாளில் நிகழக்கூடும் என்பதனையும் அவர்கள் உணர்ந்தே செயல்பட்டவர்கள் என்பதனை கொங்கணச் சித்தர் எழுதிய இப்பாடலின் மூலமாக அறியலாம்:
“எல்லாமறிந்தவரென்றுசொல்லியிந்தப்
பூமியிலேமுழு ஞானியென்றே
உல்லாசமாகவே வயிறுபிழைக்கவே
ஓடித்திரிகிறார்வாலைப்பெண்ணே
-இதுதான்சித்தர்கள்நமக்குவிட்டுச்சென்றசெய்தி.

சித்தரின் பெயர் பிறந்த மாதம் நட்சத்திரம்  வாழ்நாள  சமாதியடைந்த இடம்
1.பதஞ்சலி   பங்குனி   மூலம்  5 யுகம் 7நாட்கள்  இராமேசுவரம்.
2.அகத்தியர்   மார்கழி   ஆயில்யம்  4 யுகம் 48 நாட்கள்  திருவனந்தபுரம்.
3.கமலமுனி   வைகாசி   பூசம்  4000 வருடம் 48 நாட்கள திருவாரூர்.
4.திருமூலர்  புரட்டாதி   அவிட்டம்  3000 வருடம் 13 நாட்கள்  சிதம்பரம்.
5.குதம்பையார்   ஆடி   விசாகம்  1800 வருடம் 16 நாட்கள்  மாயவரம்.
6.கோரக்கர்   கார்த்திகை ஆயில்யம்  880 வருடம் 11 நாட்கள்  பேரூர்.
7.தன்வந்திரி   ஐப்பசி   புனர்பூசம்  800 வருடம் 32 நாட்கள்  வைத்தீச்வரன் கோவில்.
8.சுந்தரானந்தர்   ஆவணி   ரேவதி  800 வருடம் 28 நாட்கள்  மதுரை.
9.கொங்கணர்   சித்திரை   உத்திராடம்  800 வருடம் 16 நாட்கள்  திருப்பதி.
10.சட்டமுனி   ஆவணி  மிருகசீரிடம்  800 வருடம் 14 நாட்கள்  திருவரங்கம்.
11.வான்மீகர்   புரட்டாதி   அனுசம்  700 வருடம் 32 நாட்கள்  எட்டுக்குடி.
12.ராமதேவர்   மாசி   பூரம்  700 வருடம் 06 நாட்கள்  அழகர்மலை.
13.இடைக்காடர்   புரட்டாதி   திருவாதிரை  600 வருடம் 18 நாட்கள்  திருவண்ணாமலை.
14.மச்சமுனி   ஆடி   ரோகிணி  300 வருடம் 62 நாட்கள்  திருப்பரங்குன்றம்.
15.கருவூரார்   சித்திரை   அஸ்தம்  300 வருடம் 42 நாட்கள்  கருவூர், தஞ்சை.
16.போகர்   வைகாசி   பரணி  300 வருடம் 18 நாட்கள்  பழனி.
17.பாம்பாட்டி   கார்த்திகை   மிருகசீரிடம்  123 வருடம் 14 நாட்கள்  சங்கரன்கோவில்.
18.சிவவாக்கியர் காலம் தெரியவில்லை கும்பகோணம்.

No comments:

Post a Comment