Sunday, 15 May 2016

சித்தர்கள் வரலாறு  இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இந்த மணீசர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:
1.     பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.     நவகோடி சித்தர்கள்
3.     நவநாத சித்தர்கள்
4.     நாத சித்தர்கள்
5.     நாதாந்த சித்தர்கள்
6.     வேத சித்தர்கள்
7.     வேதாந்த சித்தர்கள்
8.     சித்த சித்தர்கள்
9.     சித்தாந்த சித்தர்கள்
10.     தவ சித்தர்கள்
11.     வேள்விச் சித்தர்கள்
12.     ஞான சித்தர்கள்
13.     மறைச் சித்தர்கள்
14.     முறைச் சித்தர்கள்
15.     நெறிச் சித்தர்கள்
16.     மந்திறச் சித்தர்கள்
17.     எந்திறச் சித்தர்கள்
18.     மந்தரச் சித்தர்கள்
19.     மாந்தரச் சித்தர்கள்
20.     மாந்தரீகச் சித்தர்கள்
21.     தந்தரச் சித்தர்கள்
22.     தாந்தரச் சித்தர்கள்
23.     தாந்தரீகச் சித்தர்கள்
24.     நான்மறைச் சித்தர்கள்
25.     நான்முறைச் சித்தர்கள்
26.     நானெறிச் சித்தர்கள்
27.     நான்வேதச் சித்தர்கள்
28.     பத்த சித்தர்கள்
29.     பத்தாந்த சித்தர்கள்
30.     போத்த சித்தர்கள்
31.     போத்தாந்த சித்தர்கள்
32.     புத்த சித்தர்கள்
33.     புத்தாந்த சித்தர்கள்
34.     முத்த சித்தர்கள்
35.     முத்தாந்த சித்தர்கள்
36.     சீவன்முத்த சித்தர்கள்
37.     சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.     அருவ சித்தர்கள்
39.     அருவுருவ சித்தர்கள்
40.     உருவ சித்தர்கள்

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”
— என்று பல குறிப்புகள் உள்ளன.

சித்தர் பழமொழிகள்.  சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை  தொகுத்தளித்திருக்கிறார்.
1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்
1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்  உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.  உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.  சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்  மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும் : ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் : விரும்பிப் போனால் விலகிப் போகும்.  விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

No comments:

Post a Comment